செவ்வாய், 8 மார்ச், 2016

சர்வதேச மகளிர் தினவிழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (08.03.2016) சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறி மகளிர் தமக்கான உரிமை வேண்டி முதன் முதலில் பிரான்சில் குரல் கொடுத்ததையும், பின்னர் அது மாபெரும் கிளர்ச்சியாக ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியதையும் எடுத்துக்கூறி, 1848 மார்ச் 8 அன்று லூயிஸ் பிளங்க் அவர்களால்  பிரான்சின் புரூஸ்ஸிலியில்  அமைக்கப்பட்ட இரண்டாவது குடியரசில் முதன் முதலில் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்கபட்டதையும், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின்   வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,
பின்னர் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கல்வி, பெண் உரிமை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய  நாடகம், விழிப்புணர்வு நடனம், பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர் இதில் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு பெற்றது சிறப்புக்குறியது.
அடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் உதை ஆசிரியர் திருமதி த. லதா மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்துக்கொண்டனர். 











































































புதன், 2 மார்ச், 2016

தமிழ் இணையப் பயிலரங்கு........


கிருஷ்ணகிரி, தருமபுரி  மாவட்டங்களில் பணிபுரியும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 33 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் தலைமைப் பண்பு வளர் பயிற்சி  கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்றது.
இதில் ஒருநாள் நிகழ்வாக தமிழும் – இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கை நான் நடத்தினேன்.
அதில் தமிழ் இணைய தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை, எதிர்காலத் தேவை, பள்ளிக் கல்வியில் இதன் பயன்பாடு என்ற அளவில் மிக விரிவாக படக்காட்சிகளோடு விளக்கினேன்.
பின்னர் மின்னஞ்சல் உருவாக்கம், அதன் மூலம் வலைப்பூ உருவாக்கம், அதை பள்ளிக் கல்வி, மாணவர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து செயல் விளக்கமும், நேரடியாக வலைப்பூ உருவாக்கி அதில் படங்களையும், செய்திகளையும் பதிவேற்றம் செய்து காண்பிக்கப்பட்டது. இது அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்தது.
பின்னர் தமிழ் விக்கிபீடியா தொடர்பான பல்வேறு செய்திகளையும் அதில் நாம் நமது படைப்புகளை உள்ளீடு செய்வது பற்றியும் விரிவாக விளக்கினேன்.  
தொடந்து கற்றல்/கற்பித்தலுக்கு பயன் தரும் இணையதளங்கள் 50க்கும் மேற்பட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.