சனி, 25 மார்ச், 2017

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பயணம்.........

           ஊத்தங்கரை ஒன்றியம்  ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியின் 2017 - 18 மாணவர் சேர்க்கைக்கான கல்வி விழிப்புணர்வு களப் பயணம் நடைபெற்றது.

         பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  களப் பயணத்தில் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, அ. நர்மதா ஆகியோரும் மாணவர்களும் பங்கு பெற்றனர்.

           அப்போது பள்ளியில் இருந்து ஒரு கி. மீ தூரத்தில் உள்ள ஏரியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் கல்வியின் அவசியம் மற்றும் கல்வி விழிப்புணர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசியரால் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 

           தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அரசுப் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளின் பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் பண்முகக் கல்வி வழங்கப்படுவதை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலமும், தமது பள்ளியில்   நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் மூலமும் விரிவாக விளக்கினார். மேலும் அரசு மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பல்வேறு விலையில்லாத் திட்டப் பொருட்கள் பற்றியும் கூறி அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்து குழந்தைகளையும் தமது ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.எனக்கு (தலைமை ஆசிரியர்) பிறந்த நாள் விழா, எமது பள்ளியில்........


           இன்றைய 15.03.2017 எனது பிறந்த நாளுக்கு வழக்கம்போல எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிட ஆசிரியர்களுக்கு வழங்கிட பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் சென்றேன்.......
          அனைவருக்கும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சித் தகவலாக இருக்க வேண்டும் எனக் கருதி காலை இறவணக்கக் கூட்டத்தில் கூட எவ்வித முன் தகவலும் தெரிவிக்காமல் இறைவணக்கக் கூட்டத்தை முடித்துவிட்டு அலுவலக அறைக்குச் சென்றுவிட்டேன்......
       அடுத்த சில நிமிடங்களில் எனக்கே அதிர்ச்சி அளித்தார்கள் எனது மாணவர்கள், ஆம் எனக்கான பிறந்த நாள் பரிசுகளோடும், எனக்கு வாழ்த்து கூறவும் எனது அறையில் குழுமிவிட்டார்கள் 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து குழந்தைகளும்.....
               எனது பள்ளி உதவி ஆசிரியர்களோ அவர்களும் தமது பங்காக பிறந்த நாள் கேக் சிறப்பு செய்வதற்கான சால்வை, பரிசுப் புத்தகம் என கொண்டு வந்து நான் அவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு முந்திக்கொண்டார்கள்......
அந்த நேரம் எனது மனதில் உதித்தது என் மீது சுமத்தப்படும் கடன் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது, அதை அனைவரிடமும் நேரிலேயே கூறியும்விட்டேன். ஆனால் அவர்களின் பதில் என்னை சிந்திக்கத் தூண்டிவிட்டது.....
                ஆம், அதில்தான் அடங்கியுள்ளது தலைமை ஆசிரியர் - உதவி ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான மேம்பட்ட ஆரோக்கியமான உறவு.......
             இந்த உறவு இன்றும், என்றும் தொடர எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்கட்டும்........
                              எனக்கு இன்று நேரிலும், அலைபேசி வழியாகவு, முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாகவும் காலையில் இருந்து இரவு வரையில் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிய எனது அன்பு நட்புகள், உறவினர்கள், மனைவி, மகன், மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி...நன்றி.... நன்றி......