திங்கள், 8 செப்டம்பர், 2014

முப்பெரும் விழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 08.09.2014 ல் உலக எழுத்தறிவு தினவிழா, ஆசிரியர் தின விழா, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
     ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊத்தங்கரை ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு கா. நேரு, சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். ஆசிரியப் பயிற்றுனர்கள் திருமதி இரா. வசந்தி, திரு இரா. இராஜா, திரு சி. சிவலிங்கம் மற்றும் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் திரு கு. கணேசன்,  பள்ளி உதவி ஆசிரியர்கள் வே வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.   
விழாவில் பேசிய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் சீரிய கற்பித்தல் பணி, நிர்வாகத் திறமை. அனைவரிடமும் பழகும் விதம் மற்றும் மற்றவர்களுக்காக உதவும் பண்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசினர்.
பின்னர் தமது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின பரிசுகளை வழங்கிய பின் ஏற்புரை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ .இராஜேந்திரன் அவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விருதை தமது உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பனம் செய்வதாகக் கூறினார்.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு இரா. முரளி அனைவரூகும் நன்றி கூறினார்.


























1 கருத்து:

  1. அன்புள்ள அய்யா திரு.கவி செங்குட்டுவன் அவர்களுக்கு.
    வணக்கம்.
    பள்ளியைக் கோயிலாகக் கருதும் எண்ணம் வண்ணமானது. வளமானது. ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்...நம் பாரத தேசமென்ற தோள் கொட்டுவோம்’ என்றானே பாரதி...அவன் வழியில் நீங்கள்...
    அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே... தங்களின் முயற்சி வெற்றியடையும். வாழ்த்துகள்.
    எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு